பாகிஸ்தான் வீரரை பாசத்துடன் கட்டியணைத்த பாண்ட்யா: நெகிழும் நெட்டிசன்கள்!

பாகிஸ்தான் வீரரை பாசத்துடன் கட்டியணைத்த பாண்ட்யா: நெகிழும் நெட்டிசன்கள்!

ஆசியக் கோப்பையின் நேற்றைய ஆட்டத்தின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கட்டிப்பிடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டத்தால் துபாயில் நேற்று நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 33 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்ட்யா தனது வெற்றிகரமான சிக்ஸர் மூலம் இந்தியாவை வெற்றிக்கனியை சுவைக்க வைத்தார்.

இந்தியாவின் இந்த வெற்றியை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாண்ட்யாவின் பாசக்கார புகைப்படம் ஒன்று இன்று வைரலாகிக்கொண்டிருக்கிறது. நேற்றைய ஆட்டத்தின் போது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை பின்னால் இருந்து ஹர்திக் பாண்ட்யா கட்டிப்பிடித்த செயல், தற்போது அவரது அபாரமான ஆட்டத்தை தாண்டியும் அனைவரின் மனதையும் வென்றுள்ளது. இந்த படம் அனைவராலும் பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் பாராட்டினைப் பெற்றுள்ளது. இரு நாட்டு மக்களும் இந்த புகைப்படத்தைக் கண்டு நெகிழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது. 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்ததுடன், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில், ஹர்திக் பாண்ட்யா அடித்த அபார சிக்ஸரையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in