ஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு... தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கருத்து!

இந்திய அணி
இந்திய அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இருப்பினும், இந்திய அணிக்கான சவால் நிறைந்த போட்டி இன்னும் வரவில்லை என்று நான் கூறுவேன். 

கிரீம் ஸ்மித்
கிரீம் ஸ்மித்

இங்கிலாந்துக்கு எதிரான  போட்டி சிறிது சவாலானதாக இருந்தது. ஆனால், இதுவரை இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் அதன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எப்போதும் கடினம். சொந்த மண்ணில் அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் சமபலம் மிக்கதாக உள்ளன. தற்போது இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாதது அந்த அணிக்கு சிறிது பின்னடைவாகும். இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினால் அப்போது பேட்டிங்குக்கு ஆல்ரவுண்டர்  ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கியமான வீரராக இருப்பார். ஆனால், அவர் அணியில் தற்போது இல்லாதது அணிக்கு சில நேரங்களில் ஆபத்தாக அமையலாம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in