பாண்டியாவுக்கு பதில் அவரை கொண்டு வாருங்கள்! ஹர்பஜன் யோசனை!

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இந்நிலையில் நாளை தர்மசாலாவில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

கடந்த 2002ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் தொடர் தொடங்கி, கடந்த 2022ம் ஆண்டு நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரை நியூசிலாந்து அணி முக்கிய ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு தலைவலியாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக நாளைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்தும் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால், நாளைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துடனான போட்டியின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா நாளைய போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ்
ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்காமல், சூர்யகுமார் யாதவை சேர்க்க வேண்டும் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தாக்கூர் பந்து வீச்சில் ரன் வாரி வழங்குவதோடு, பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவதில்லை. அதனால், சூர்ய குமார் யாதவ் மற்றும் பந்துவீச்சில் முகமது ஷமிக்கும் இடமளிக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த யோசனையை இந்திய அணி நிர்வாகம் ஏற்குமா அல்லது ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் தாக்கூரையே விளையாட வைக்குமா என்பது போட்டிக்கு முன்னர் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in