ஐபிஎல் வரலாற்றிலேயே படுமோசமான சாதனை... மோகித் சர்மாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் மோகித் சர்மா
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் மோகித் சர்மா

4 ஓவர்கள் வீசி 73 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை குஜராத் வீரர் மோகித் சர்மா படைத்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் 40வது லீக் போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் 88 ரன்களும், அக்சார் பட்டேல் 66 ரன்களும் விளாசினர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்ள் மட்டும் இழந்து 224 ரன்கள் எடுத்தது. குஜராத் வீரர் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரித்திமான் சாகா 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த இன்பாக்ட் வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 65 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர் 55 ரன்கள் குவித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 20 முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் மட்டும் எடுத்தது. டெல்லி அணியில் ராசிக் சலாம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

இதனிடையே இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோகித் சர்மா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 4 ஓவர்கள் பந்து வீசிய அவர், 73 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட்டை கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். அவரை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இணையத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 35 வயதான மோகித் சர்மா, இதுவரை 108 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 129 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in