பவானி தேவி: புத்தாண்டில் முழுவீச்சில் வாள்வீச்சு!

பவானி தேவி
பவானி தேவி

வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி 2022-ல் 4 உலக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கான பயிற்சி மற்றும் இதர தேவைகளுக்காக மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ8.16 லட்சம் ஒதுக்கியுள்ளது.

வாள்வீச்சு போட்டிகளில் உலக தரவரிசை விளையாட்டு வீராங்கனையான பவானிதேவி, வரும் 2022-ல் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க உள்ளார். சென்னையை சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார். இந்த ஆண்டின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பவானி தேவி பங்கேற்றுள்ளார்.

ஜார்ஜியாவில் ஜன.14 முதல் ஜன.16 வரை நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்காக, அங்கு ஜன.4 முதல் தொடங்கும் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார். தொடர்ந்து பல்கேரியாவில் ஜன.28-29; கிரீஸ் மற்றும் பெல்ஜியத்தில் மார்ச் மாதம் நடைபெறும் 2 சர்வதேச போட்டிகள் ஆகியவற்றிலும் பவானி தேவி பங்கேற்க உள்ளார். இந்த வகையில் அடுத்து வரும் 3 மாதங்களில், 4 உலகக்கோப்பை போட்டிகளில் பவானி தேவி இந்தியா சார்பில் கலந்துகொள்கிறார். அந்த போட்டிகளுக்கான பயிற்சிகளில் தற்போது முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

பயிற்சிகள், உபகரணங்கள், பயணங்கள் என அதிக செலவு பிடிக்கும் வாள்வீச்சு போட்டிகளில், நிதியாதர பிரச்சினைகள் காரணமாக, பவானி தேவி சிக்கல்களை சந்தித்து வந்தார். இதன் காரணமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினையும் இழந்து வந்திருக்கிறார். கடந்தாண்டின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது முதல், அரசு தரப்பிலிருந்து உத்திரவாதமான உதவிக் கரம் நீண்டுள்ளது. வரும் உலகக்கோப்பை போட்டிகளுக்கான தயாரிப்புகளுக்காக, வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ரூ8.61 லட்சத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in