ஆவேசமாய் மோதிக் கொண்ட ஆட்டுக்கிடாக்கள்!

ஆட்டுக்கிடா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழரசி எம்எல்ஏ பரிசு வழங்கினார்.
ஆட்டுக்கிடா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழரசி எம்எல்ஏ பரிசு வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஆட்டுக்கிடா சண்டைப்போட்டி நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் இப்போட்டி இன்று நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டுக்கிடாக்கள் போட்டியில் பங்கேற்றன.

இதில் ஆவேசமாக மோதி வெற்றி பெற்ற ஆட்டுக்கிடாக்களுக்கு வேட்டி, துண்டு ஆகியவை பரிசாக அணிவிக்கப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களுக்கு மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பரிசு வழங்கினார். திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in