பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை மரணம்!

பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை மரணம்!
Updated on
1 min read

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை சாமுண்டீஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி(53). தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 1991-ம் ஆண்டுசர்வதேச மகளிர் வலுதூக்கும்போட்டியில் 3-ம் இடமும், 1992,1994-ம் ஆண்டுகளில் நடந்தஆசிய வலுதூக்கும் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 1995-ம் ஆண்டு நடந்த ஆசிய வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

இவரின் கணவர் அசோக் கோவையில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மூத்த உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஹரிகிருஷ்ணன், மகேஸ்வர் என்ற இரு மகன்களும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

சாமுண்டீஸ்வரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in