இந்தியாவுக்கு சாதகமாக டிஆர்எஸ் டெக்னாலஜியில் குளறுபடி: பாக். முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!

ஹஸன் ராஸா, இந்திய அணி
ஹஸன் ராஸா, இந்திய அணி

இந்தியாவுக்கு சாதகமாக டிஆர்எஸ் டெக்னாலஜியில் குளறுபடி செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹஸன் ராஸா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தனது 49வது சதத்தை அடித்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். அதேபோல், பந்து வீச்சில் ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை திணறிடித்தனர்.

அதிலும் ஜடேஜா நேற்றை போட்டியில் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹஸன் ராஸா, நேற்றைய போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு சாதகமாக குளறுபடி செய்யப்பட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கிளாசன் விக்கெட்
கிளாசன் விக்கெட்

இதுதொடர்பாக, பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், தென்னாப்பிரிக்க வீரர் கிளாஸன் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது, நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், இந்திய வீரர்கள் டிஆர்எஸ் முறைப்படி மூன்றாவது நடுவரிடம் முறையிட்டனர். அதில் கிளாஸன் அவுட் என முடிவு வந்தது.

இதனைக் குறிப்பிட்டுள்ள ஹஸன், லெக் சைட் திசையில் விழுந்த பந்தை கிளாஸன் மிடில் மற்றும் லெக் ஸ்டெம்புகளுக்கு இடையில் விளையாடினார். பிறகு எப்படி பந்து லெக் ஸ்டம்பில் பட முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, சிலருக்காக டிஆர்எஸ் முறையில் குளறுபடிகள் செய்யப்படுவதாகவும் அவர் பகிரங்மாக குற்றம்சாட்டினார்.

இதற்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு மட்டும் சிறப்பு பந்து வழங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in