இந்தியா அதிரடி ஆட்டம்… களத்துக்கே வந்து கண்டு ரசிக்கும் டேவிட் பெக்காம்!

சச்சினுடன், டேவிட் பெக்காம்
சச்சினுடன், டேவிட் பெக்காம்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியை இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னால் கேப்டன் டேவிட் பெக்காம் களத்துக்கே வந்து கண்டு ரசித்து வருகிறார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மாவும், சுப்மன் கில்லும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ரோகித் ஷர்மா 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 79 ரன் எடுத்திருந்த நிலையில், முதுகுப் பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறினார். விராட் கோலி 117 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 101 ரன்னுடனும், கேஎல் ராகுல் 6 ரன்னுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தியா 48 ஓவர் முடிவில் 363 ரன் எடுத்திருந்தது.

விராட் கோலியுடன் டேவிட் பெக்காம்
விராட் கோலியுடன் டேவிட் பெக்காம்

இந்த போட்டியை காண இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் மும்பைக்கு வருகை தந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோருடன் இணைந்து அவர் இந்த போட்டியை கண்டு ரசித்து வருகிறார். முன்னதாக அவர் சச்சினுடன் சேர்ந்து மைதானத்தை சுற்றிப்பார்த்தார். அப்போது, கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலி, பெக்காமுக்கு இரண்டு முறை பந்தை பாஸ் செய்தார். அதனை மீண்டும் பெக்காம் பாஸ் செய்ய, இதனை சச்சின் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். இதைத்தொடர்து, விராட் கோலியுடன் அவர் சிறிது நேரம் உரையாடினார். இது தொடர்பான வீடியோ, மற்றும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in