இறுதிப்போட்டி தேவையில்லை... இந்தியாவுக்கே கோப்பையை கொடுத்துவிடலாம்... ஆஸி. முன்னாள் வீரர் தடாலடி

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

நடந்து கொண்டிருக்கும் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பைனல் நடத்த வேண்டிய அவசியமே இல்லை.  இந்தியாவுக்கே கோப்பையை கொடுத்து விடலாம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

பிராட் ஹாக்
பிராட் ஹாக்

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டி ஆரம்பத்தில் ரசிகர்களிடையே வரவேற்பு இல்லாத நிலையில் இருந்தது.  ஆனால் அதன் பின்னர் ஆப்கானிஸ்தான்,  வங்கதேசம் உள்ளிட்ட அணிகளின் எழுச்சி, இந்தியாவின் தோல்வியே காணாத வெற்றி,  நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியின் வீழ்ச்சி உள்ளிட்டவை ரசிகர்களை  கிரிக்கெட் மைதானத்தை நோக்கி வரவழைத்தது.

தற்போது இந்தியா விளையாடாத போட்டிகளுக்கும்கூட மைதானங்கள் நிரம்பி வழிகிறது.  இந்த நிலையில் தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அணியான இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளிலும்  சிறப்பாக விளையாடி எதிரணிகளை பந்தாடியிருக்கிறது.

இந்திய அணிக்கு போட்டி அணியாக தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே இருக்கும் என்று கணித்திருந்த வேளையில், நேற்று முன்தினம்  அந்த அணியை 83 ரன்களில் சுருட்டி வீசியது. இதனால் பல அணிகளும் இந்திய அணியை பார்த்து விளையாட பயப்படுகின்றன.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக்  " இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியை  பார்த்தபோது,  இறுதிப் போட்டியே தேவையில்லை என்பதுபோல இருக்கிறது. இறுதிப் போட்டி நடத்தினால் அந்தப் போட்டியில் இந்திய அணியுடன் உலக அணியைத்தான் விளையாட வைக்க வேண்டும். அந்த அளவிற்கு இந்திய அணி பலமாக இருக்கிறது!" என்று பாராட்டி கூறியிருக்கிறார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in