டைமண்ட் லீக் சாம்பியனான முதல் இந்தியர்: மீண்டும் சாதித்தார் நீரஜ் சோப்ரா!

டைமண்ட் லீக் சாம்பியனான முதல் இந்தியர்: மீண்டும் சாதித்தார் நீரஜ் சோப்ரா!

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற டைமண்ட் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, தற்போது மதிப்புமிக்க டைமண்ட் லீக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒலிம்பிக் மற்றும் தடகளப் போட்டிகளுக்கு இணையாக மதிக்கப்படும் போட்டியாக டைமண்ட்ஸ் லீக் உள்ளது.

டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ராவின் முதல் முயற்சி ‘நோ த்ரோ’ என அறிவிக்கப்பட்டதால் அவருக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்தாக செக் குடியரசு வீரர் ஜக்குப் வாட்லெஜ் 84.15 மீ தூரம் எறிந்து முன்னிலை பெற்றார். இந்த சூழலில் நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியில் 88.44 மீ எறிந்து முன்னேறினார். அவரைத் தொடர்ந்து வாட்லெஜ் 86.00 மீ எறிந்து இரண்டாம் இடம்பிடித்தார்.

முன்னதாக ஆகஸ்ட் மாதம், சுவிட்சர்லாந்து லூசானாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில், நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பெற்றார். இந்தப் போட்டியில் முதல் ஆறு இடங்களைப் பிடித்த வீரர்கள் ஜூரிச்சில் நடந்த இறுதிச்சுற்றில் தற்போது பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் முதன்முறையாக இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா, 2023ல் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கவும் தகுதிப் பெற்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in