ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்... மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். ஒடிசாவில் நடைபெற்ற ஏஸ் ஈட்டி எறிதல் போட்டியில் 82.27 மீட்டர் எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில், தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 82.27 மீட்டரை எட்டி முதலிடம் பிடித்து அசத்தினார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடிய நீரஜ் சோப்ரா, 3 சுற்றுகளுக்கு பின்னர் 2-வது இடம் பிடித்ததார். அதன்பின்னர் 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். இப்போட்டியில் டி.பி. மானு வெள்ளி பதக்கமும், உத்தம் பட்டீல் வெண்கல பதக்கமும் வென்றனர்.

 நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

ஒடிசாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் ரோஸி மீனா பால்ராஜ், மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் 4.05 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா்.மற்றொரு தமிழரான பரணிகா இளங்கோவன் 4 மீட்டருடன் வெள்ளி வென்றாா்.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in