‘தோனி தோனிதான்’... சென்னை விமான நிலையத்தை தெறிக்கவிட்ட சிஎஸ்கே ரசிகர்கள்!

சென்னை விமான நிலையத்தில் மகேந்திர சிங் தோனி
சென்னை விமான நிலையத்தில் மகேந்திர சிங் தோனி

விசாகப்பட்டினம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில், தோனியை கண்ட ரசிகர்கள், ’தோனி, தோனி’ என விண்ணதிர முழக்கமிட்டனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் தற்போது புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளதோடு, புதிய கேப்டனாக ருத்துரஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, தோனி மீதான அன்பு இன்னும் ரசிகர்களுக்கு குறையவில்லை.

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த சிஎஸ்கே வீரர்கள்
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த சிஎஸ்கே வீரர்கள்

அந்த வகையில் மைதானத்தில் தோனியை கண்டவுடன் உற்சாக குரல் எழுப்புவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் வருகிற 31ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் மகேந்திர சிங் தோனி
சென்னை விமான நிலையத்தில் மகேந்திர சிங் தோனி

சென்னை விமான நிலையத்தில் வீரர்களை கண்ட ரசிகர்கள், உற்சாக வரவேற்பளித்தனர். குறிப்பாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கண்டவுடன் ரசிகர்கள் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ’தோனி, தோனி’ என அவர்கள் முழக்கமிட்டது, விண்ணை அதிரும் வகையில் இருந்தது. இதைத் தொடர்ந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு தோனி உட்பட வீரர்கள் விமான நிலையத்திற்குள் சென்றனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in