நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டி - டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்!

இங்கிலாந்து - நெதர்லாந்து மோதல்
இங்கிலாந்து - நெதர்லாந்து மோதல்

நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

புனேயில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்க உள்ளது.

இங்கிலாந்து அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 1ல் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியையும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால், அந்த அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற இன்றைய போட்டியிலும், அடுத்த போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் போகும் நிலை ஏற்பட்டால் அது இங்கிலாந்து அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படும்.

நெதர்லாந்து அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2ல் வெற்றியும், 4 போட்டியில் தோல்வியையும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாகும். அதனால், இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in