
நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 340 ரன் இலக்காக இலங்கு நிர்ணயித்துள்ளது.
புணேயில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் போட்டியில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 340 ரன் எடுத்தது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 84 பந்துகளில் 108 ரன் எடுத்தார். அதில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளும் அடக்கம். கேப்டன் ஜோஸ் பட்லர் 87 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்னும் எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் பாஸ் டிலீட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத், லோகன் வேன் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
340 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியுள்ளது. 5.4 ஓவரில் 13 ரன்களை எடுத்துள்ள நெதர்லாந்து 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியான நிலையில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
அதேநேரம், இதுவரை ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் ஒரு முறை கூட விளையாடாத நெதர்லாந்து அணி அந்த வாய்ப்பை பெறும் வாய்ப்பு இன்றைய வெற்றி மூலம் உறுதியாகும். அந்த வாய்ப்பை தக்க வைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!