ஆஸ்திரேலியாவின் கனவை சிதைத்தது இங்கிலாந்து: அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது 2 அணிகள்!

ஆஸ்திரேலியாவின் கனவை சிதைத்தது இங்கிலாந்து: அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது 2 அணிகள்!

இலங்கை அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

டி20 உலகக் கோப்பையின் குரூப் 1 பிரிவு அணிகளுக்கு இடையேயான கடைசி சூப்பர் 12 சுற்று ஆட்டம் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கையை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

குரூப் 1ல் நியூசிலாந்து அணி 7 புள்ளிகள் மற்றும் +2.113 ரன்ரேட்டுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதிபெற்றது. நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு முன்னேறியது. ஆனால் அதன் ரன்ரேட் - 0.173 ஆக இருந்தது. இந்த சூழலில் இன்றைய போட்டியில் வென்றதால் 7 புள்ளிகள் மற்றும் + 0.473 ரன்ரேட்டுடன் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. குறைந்த ரன்ரேட் விகிதம் காரணமாக ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்திருந்தால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும்.

தற்போது குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் குரூப் 2 வில் நாளை தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து, இந்தியா - ஜிம்பாப்வே, பாகிஸ்தான் - பங்களாதேஷ் என மூன்று போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முடிவுகளைப் பொறுத்தே எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in