இந்திய அணி முதல் பேட்டிங்... பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து மோதல்
இந்தியா - இங்கிலாந்து மோதல்

இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

லக்னோவில் நடைபெறும் 29வது உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.

இந்தியா இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் என்ற பெருமையை பெரும். ஆனால், இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோயுள்ளது.

இந்நிலையில், இரண்டு அணிகளுமே தங்களுக்கான வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in