இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ, தாவீத் மலான் ஆகியோர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேர்ஸ்டோ 30 ரன்னுக்கும், மலான் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களத்திற்கு வந்த ஜோ ரூட், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மொயின் அலி 15 ரன்களிலும், வோக்ஸ் 0 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 30.1 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.