இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

சாதனை... உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்!

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

உலகக்கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்.

இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வென்ற இளவேனிலுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in