விராட் கோலி விளையாடாதது ஏமாற்றமளிக்கிறது... இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் வருத்தம்!

ஆண்டர்சன் கோலி
ஆண்டர்சன் கோலி

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக ஆடாத நிலையில், "கோலி விளையாடாதது ஏமாற்றம் அளிக்கிறது" என்று இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது. இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச்.7 ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான பயிற்சியில் இருநாட்டு வீரர்களும் மும்மரமாக உள்ளனர். முன்னதாக, இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இடம் பெற்றிருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டி துவங்க மூன்று நாட்கள் இருந்த நிலையில் தனிப்பட்ட காரணத்தால் தான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது முடிவை மதித்து பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் அவரை விடுவித்தது. அப்போது விராட் கோலி இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால் இளம் வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா, இந்தத் தொடரை வென்றுள்ளது.

ஆண்டர்சன்
ஆண்டர்சன்

எனினும் அவ்வப்போது கோலி குறித்து இளம் வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் நினைவுக்கூறி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலி குறித்து பகிர்ந்துக் கொண்ட விஷயம் வைரலாகி வருகிறது.

ஆண்டர்சன் - கோலி
ஆண்டர்சன் - கோலி

"இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி விளையாடாதது இங்கிலாந்து வீரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எதிராக அவர் விளையாடாதது ஏமாற்றமாகவே உள்ளது. அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினமான ஒன்று. அவர் ஒரு சிறந்த வீரர்" என்று விராட் கோலியை ஆண்டர்சன் புகழ்ந்துள்ளார். இந்திய வீரர்களிடம் மட்டுமின்றி அனைத்து நாடுகளின் வீரர்களுடன் விராட் கோலி நட்பில் உள்ளதே இதற்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த பிப்.15 ஆம் தேதி விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்ததை பிறந்தது. இந்த காரணத்தால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே, விராட் கோலி, இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!

கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!

4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!

சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in