2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த பின் குழந்தையை போல் தோனி கண்கலங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்று முன்தினம் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்ததாக ரசிகர்கள் கொண்டாடினர்.
இதன் காரணமாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் குறித்து அதிகமான கருத்துகள் பகிரப்பட்டது. அந்த வகையில் 2019ம் ஆண்டு இந்திய அணி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சில ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக நியூசிலாந்து அணியுடனான தோல்விக்குப் பின் இந்திய அணியின் ஓய்வறையில் இருந்த வீரர்களின் நிலைமை குறித்து கூறியுள்ளார்.
சஞ்சய் பங்கர் பேசுகையில், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சிறந்த கிரிக்கெட்டை இந்திய அணி விளையாடி இருந்தது. லீக் சுற்றில் 7 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய போது, நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்ததால் வீரர்கள் மனதளவில் நொறுங்கிவிட்டனர். அந்த சூழலில் வீரர்கள் அனைவருமே குழந்தைகளை போல் அழத் தொடங்கிவிட்டனர். அனுபவம் வாய்ந்த எம்.எஸ்.தோனியே குழந்தை போல் அழுதார். ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் உள்ளிட்டோரின் கண்கள் கலங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.
அதேபோல் தோனி ஆட்டமிழந்த போதே ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் கண்கலங்க தொடங்கினர். அந்த தோல்வியில் இருந்து தோனி மீண்டு வர கிட்டத்தட்ட 3 மாதங்களாகியது. ஏனென்றால் 3 மாதங்களுக்கு பின் பேசிய போது, அந்த ரன்னுக்கு ஓடும் போது நான் ஏன் டைவ் அடிக்க மறந்தேன் என்று இப்போதும் யோசித்து வருவதாக என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் அதுவே தோனியின் கடைசி போட்டியாக அமைந்தது.
வழக்கமாக உணர்வுகளை எளிதில் வெளிக்காட்டாத தோனி குழந்தையை போல் கண்கலங்கினார் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ள சம்பவம் தோனி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2019ம் ஆண்டு தோல்விக்கு மருந்தாக, நடைபெற்று வரும் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு