டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்... முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி!

பி.வி.சிந்து
பி.வி.சிந்து
Updated on
1 min read

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து - ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-14, 18-21, 21-10 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் பிரிவில் உலக சாம்பியன் தொடரில் வெண்கலம் வென்ற லக்‌ஷயா சென் முதல் சுற்றில் தாய்லாந்தின் கண்டபோன் வாங்சரோனிடம் 16-21, 18-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதேபோல், ஹெச்.எஸ்.பிரணாய், சத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in