டேவிட் மில்லரின் அதிரடியால் பதறிய இந்திய ரசிகர்கள்: திகிலான கடைசி ஓவர்!

டேவிட் மில்லரின் அதிரடியால் பதறிய இந்திய ரசிகர்கள்: திகிலான கடைசி ஓவர்!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தாெடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி கௌகாத்தியில் நேற்று இரவு நடைபெற்றது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். இது இவருக்கு 20-வது அரை சதமாகும். அவருக்கு பக்கபலமாக கேப்டன் ரோகித் சர்மா துணை நின்றார். 37 பந்தில் 43 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். பின்னர் விராட் கோலி களமிறங்கி அதிரடியை வெளிப்படுத்தினார். 28 பந்துகளில் 49 ரன்களை குவித்த கோலி, 7 பவுண்டரி, ஒரு சிக்சை விளாசினார்.

மறுமுனையில் அதிரடி காட்டி விளையாடி வந்த கே.எல்.ராகுல் 57 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த ரன்னை 28 பந்து அவர் அடித்தார். இதில் 4 சிக்சர், 5 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் வந்த அதிரடி மன்னன் சூரியகுமார், தென் ஆப்பரிக்கா பந்துவீச்சாளர்களை நாலாபக்கமும் தெறிக்கவிட்டார். 22 பந்துகளில் 61 ரன்களை குவித்த சூரியகுமார் எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார். இவர் 5 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி தள்ளினார். பின்னர் தமிழக வீர தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் அதிரடி காட்டினார். 7 பந்தை சந்தித்த இவர், 17 ரன்களை எடுத்தார். இதில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

238 ரன்கள் எடுத்தால் வெற்றி எந்த இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக டம்பா பாவமா- டி காக் விளையாடினர். 7 பந்துகளை சந்தித்த பாவமா டக் அவுட் ஆனார். ஆனால் டி காக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இவர் இந்திய பந்துகளை நாலாபக்கமும் விளாசி தள்ளினார். மறுமுனையில் விளையாடிய ரிலீ ரோஷவ் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினார். 2 பந்துகளை சந்தித்த இவர் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய மார்க்கம் 19 ரனில் 33 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி ஒரு சிக்சர்கள் அடித்தார். பின்னர் டி காக்குடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர்களின் அதிரடியை பார்த்து இந்திய ரசிகர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் இந்திய வீரர்களின் கச்சிதமான பந்துவீச்சால் இவர்களால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டேவிட் மில்லர் 47 பந்துகளில் அபாரமாக விளையாடி 106 ரன்கள் குவித்தார். இது இவரது 2-வது சதமாகும். இதில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர் அடங்கும். தொடக்க வீரர் டி காக் 48 பந்தில் 69 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர், 3 பவுண்டரிகள் அடங்கும். தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்று நினைத்த நிலையில் இந்திய வீரரின் அபார பந்துவீச்சாால் தென் ஆப்பிரிக்கா தோல்வி தழுவியது. இந்திய தரப்பில் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. டி காக்கும், டேவிட் மில்லரும் சேர்ந்து காட்டிய அதிரடி இந்திய ரசிகர்களை பதற வைத்தது. இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற்றது ரசிகர்களை நிம்மதி அடைய வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in