தெறிக்கவிட்ட சென்னை அணியின் பந்துவீச்சு... 141 ரன்களில் சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!

சிமர்ஜீத் சிங்
சிமர்ஜீத் சிங்

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை வெறும் 141 ரன்களில் சுருட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்போட்டியில் இளம் வீரர் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 61வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார், தொடர்ந்து ஜோஸ் பட்லர் 21 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே ரன்களை குவிக்க முடியாமல் திணறி வந்த ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் ஓரளவு பொறுப்பாக ஆடினார். அவருக்கு ஜோடியாக ஜூரலும் கைகொடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

சென்னை அணி
சென்னை அணி

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே அணி தரப்பில் சிமர்ஜீத் சிங் 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல துஷார் தேஸ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 3.2 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்து சென்னை அணி ஆடி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in