ரொனால்டோ வரலாற்று சாதனை: ட்விட்டர், ஃபேஸ்புக் வரிசையில் இன்ஸ்டாகிராம்!

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

சமூக ஊடகங்களில் களமாடும் விளையாட்டு வீரர்களின் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோயர்ஸ் சாதனையை இன்ஸ்டாகிராமிலும் ஈட்டியிருக்கிறார் ரொனால்டோ. ட்விட்டர், ஃபேஸ்புக்கை தொடர்ந்து ரொனால்டாவின் இந்த சாதனை இன்ஸ்டாவிலும் சொல்லியடித்திருக்கிறது.

போர்ச்சுக்கீசிய நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பூகோள எல்லைகளை தகர்த்து இவருக்கு உலகம் முழுமைக்குமே ரசிகர்கள் ஏராளம். விருப்பத்துக்குரிய நட்சத்திரங்களை சமூக ஊடகங்களில் பின்தொடர்வதன் மூலம் ரசிகர்கள் தங்களது பேராதரவினை உறுதி செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை எகிறும்போது நட்சத்திரங்கள் புதிய சாதனையும் படைப்பதுண்டு. இந்த வகையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று(நவ.21) புதிய உலக சாதனையை எட்டினார்.

ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நேற்று 50 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான இன்ஸ்டா பாலோயர்ஸ் கொண்டவர் என்ற சாதனைக்கு ரொனால்டோ உரித்தாகிறார். லியோனல் மெஸ்ஸி, விராட் கோலி, லெப்டான் ஜேம்ஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் ரோனால்டாவை தொடர்ந்து இன்ஸ்டா பாலோயர்ஸ் எண்ணிக்கையின் சாதனையில் இடம் பிடிக்கிறார்கள். விராட் கோலியை விட ரொனால்டோவின் பாலோயர்ஸ் எண்ணிக்கை சுமார் 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர சமூக ஊடகங்களில் இதே சாதனையை ஏற்கனவே ரொனால்டோ புரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர ட்விட்டர் கணக்கை 10.5 கோடி, ஃபேஸ்புக் பக்கத்தை 15.4 கோடி என்றளவில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இந்த விளையாட்டு வீரர்கள் தங்களது பதிவுகளுக்கும், விளம்பரங்களுக்கும் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் என்பது தனி. இந்த வகையிலும், உலகளவில் இன்ஸ்டாவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராகவும் முதலிடத்தில் இருக்கிறார் ரோனால்டோ.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in