சுயநலமில்லாத ஒருவரால் தான் இதை செய்ய முடியும்... பந்துவீச்சாளர் அஸ்வின் ஓபன் டாக்!
ஐபிஎல் போட்டி தொடங்கும் ஒரு நாளுக்கு முன்பு கேப்டன் பதவியை மாற்றும் துணிச்சல் தோனிக்கு மட்டுமே உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி மாற்றப்பட்டு தற்போது கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வினும், தோனியின் நண்பரும் கிரிக்கெட் வல்லுநருமான பிரசன்னாவும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று வீடியோ வெளியிட்டுள்ள அஸ்வின், ’ஒரு சீசன் தொடங்குவதற்கு முன்பே தோனி கேப்டன் தொடர்பான முடிவை எடுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவர் கொஞ்சம் கூட சுயநலமின்றி இந்த முடிவை எடுத்துள்ளார். இது தோனியால் மட்டுமே சாத்தியம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரசன்னா, ’தோனி நினைத்திருந்தால் சாம்பியன் பட்டத்தை வென்ற உடனே ஐபிஎல் இருந்து விலகியிருக்கலாம். ஆனால், அடுத்த சீசன் விளையாட வேண்டும் என அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு தன்னுடைய உடல் தகுதியை மீட்டு இருக்கிறார்.
தற்போதும் சிஎஸ்கேவுக்கு நல்ல வீரர்களே கிடைத்துள்ளனர். தோனி நினைத்திருந்தால், இந்த சீசன் முழுவதும் விளையாடி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கலாம். எம்.எஸ் தோனி இன்னும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால் 100 டெஸ்ட் போட்டிகளில் அவர் பார்த்திருப்பார்.
ஆனால், அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தோனி, கடந்த 2017-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய தொடர் பாதியிலேயே விராட் கோலிக்கு கேப்டன் பதவி கொடுத்தார்’ என்று பாராட்டியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!
நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்... தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!
தயாநிதி மாறனை எதிர்த்து பிரேமலதா போட்டி?: பரபரப்பில் மத்திய சென்னை தேர்தல் களம்!