உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்
கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்

உலகக்கோப்பைக்கான 2023 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர். இதையொட்டி சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியைக் காண ரசிகர்கள் அகமதாபாத்திற்கு விரைந்துள்ளனர். இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக வழிபாடு ஸ்தலங்களில் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.

கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்
கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்

இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் GOOGLE என்பதில் பேட் மற்றும் பால், கோப்பை மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கூகுளின் தேடல் பாக்ஸ் பக்கத்தில் பேட் மற்றும் பந்து இருப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த டூடுல் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in