தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிரிக்கெட் போட்டி... கோவையில் நெகிழ்ச்சி!

தசைநார் நோய்க்கு சிகிச்சை அளிக்க நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்
தசைநார் நோய்க்கு சிகிச்சை அளிக்க நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்

தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு சார்பில் டர்ஃப் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தி சிகிச்சைக்காக நிதி சேகரித்தனர்.

உலகெங்கும் தசைநார் சிதைவு எனப்படும் மரபணு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தசைநார் சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிக்க 5 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை செலவாகும். இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொகை திரட்டுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியை எதிர்நோக்கி வருகின்றனர்.

போட்டியில் வென்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள்
போட்டியில் வென்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள்

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க பெரும் பொருட்செலவாகும் என்ற நிலையில், அரசின் கவனத்துக்கு செல்லும் குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சைக்கான மருந்துகள், வரிச்சலுகையுடன் கழிவு விலையில் மருந்துகள் கிடைத்து வருகின்றன. மேலும் தன்னார்வ அமைப்புகள் மூலம் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டு தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. தசை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த இன்ஃப்ரா என்ற தன்னார்வ அமைப்பு டர்ஃப் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை சிகிச்சைக்கு வழங்க முடிவெடுத்தனர்.

தசைநார் நோய்க்கு சிகிச்சை அளிக்க நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்
தசைநார் நோய்க்கு சிகிச்சை அளிக்க நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்

அதன்படி கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் கிரிக்கெட் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பாலக்காடு, கரூர், நாமக்கல் மற்றும் அவிநாசியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. இதனை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். மேலும் இவர்களுக்காக ரத்த தானம் செய்வோரும் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in