முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற 19 வயது கோகோ காஃப்! குவியும் வாழ்த்துகள்!

வெற்றிக் கோப்பையுடன் கோகோ காஃப்
வெற்றிக் கோப்பையுடன் கோகோ காஃப்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் அரினா சபலெங்காவை வீழ்த்தி அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ காஃப் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்த ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் அரினா சபலெங்காவுடன் புளோரிடாவைச் சேர்ந்த 19 வயதான காஃப் மோதினார். முதலில் காஃப் மோசமான தொடக்கத்தில் இருந்து மீண்டு 2-6, 6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

கோகோ காஃப்
கோகோ காஃப்

இந்த தோல்விக்கு மத்தியிலும், போட்டியில் இரண்டாம் இடத்தில் உள்ள சப்லெங்கா இன்று வெளியிடப்படும் தரவரிசைப்பட்டியலில் உலகின் முதல்நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கிற்கு பதிலாக களமிறங்க உள்ளார்.

இப்போட்டிக்குப் பிறகு ஆறாவது நிலை வீரரான காஃப் கூறுகையில், " நான் இப்போது முழு மகிழ்ச்சியுடனும், கொஞ்சம் நிம்மதியாகவும் இருக்கிறேன். உண்மையைச் சொல்வதென்றால், இந்த முறை மற்றவர்களுக்காக அல்ல, எனக்காகவே நான் வெற்றி பெற விரும்பினேன்" என்றார்.

1999-ல் செரீனா வில்லியம்ஸ் பட்டத்தை வென்ற பிறகு, கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் அமெரிக்க இளம்பெண் காஃப் ஆவார். இந்த போட்டியை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல பிரபலங்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற கோஃப்பிற்கு ஒபாமா வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in