மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்று வாருங்கள்... இந்திய அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் நாட்களாக நடைபெற்ற லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பதைக் காண ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளது. இந்தப் பட்டத்திற்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத அணியாக இந்தியா திகழ்கிறது. இதனால், இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே கூடுதலாக உள்ளது.

இன்றைய போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அகமதாபாத் சென்றுள்ளனர். அதேபோல், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியைக் காண சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், " 3வது உலகக் கோப்பையை வென்று வாருங்கள்" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in