`இளைஞர்களின் உந்துசக்தி நீங்கள்'- பி.வி.சிந்துக்கு முதல்வர் வாழ்த்து

`இளைஞர்களின் உந்துசக்தி நீங்கள்'- பி.வி.சிந்துக்கு முதல்வர் வாழ்த்து

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் பசல் நகரில் நடைபெற்றது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் ஆகியோர் மோதினர். இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் பி.வி.சிந்து முதல்முறையாக ஸ்விஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதுவரை புசானனுடன் 17 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள சிந்து, நேற்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 16 போட்டிகளை வென்றுள்ளார். மேலும், 2019-ல் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பி.வி.சிந்துவிற்கு இது 2-வது பட்டம் ஆகும்.

அஸ்விஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்துவிசையாக விளங்க எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in