புதுப்பொலிவு பெறப் போகிறது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

புதுப்பொலிவு பெறப் போகிறது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

ரூ.139 கோடியில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க மைதானம் சென்னை சேப்பாக்கம் மைதானம். இந்த மைதானத்தில் முதல் தர கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மைதானத்துக்கு என்று தனிச் சிறப்புகளும் உண்டு. தற்போது இந்த மைதானத்தை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு மாநில அரசின் சுற்றுச்சுழல் மதிப்பீட்டு ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது. தற்போது மைதானம் 62 ஆயிரம் சதுர அடியில் இருக்கிறது. இதனை 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ரூ.139 கோடியில் புதுப்பிக்க 18 நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நீர்நிலை, நீரோட்டம் சார்ந்த இடங்களிலும், மரங்களை வெட்ட அனுமதியில்லை என்றும் அருகில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் மைதானம் தயாராக உள்ளது.

Related Stories

No stories found.