ஆப்கனை சமாளிக்குமா பாகிஸ்தான்... இன்று சென்னையில் பலப்பரீட்சை!

ஆப்கனை சமாளிக்குமா பாகிஸ்தான்... இன்று சென்னையில் பலப்பரீட்சை!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

 பாகிஸ்தான்
பாகிஸ்தான்

இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.

பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, ரஷித் கான், முஜீபுர் ரகுமான் ஆகிய தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். இதனால் சிறிதும் கவனக்குறைவாக பாகிஸ்தான் அணி விளையாடினால் தோல்வி நிச்சயம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in