பரபரக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்- இந்தியா பந்துவீச்சு... வங்கதேசம் பேட்டிங்!

இந்தியா - வங்கதேசம் மோதல்
இந்தியா - வங்கதேசம் மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17வது லீக் போட்டி புனேயில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடனான போட்டிகளில் அசத்தலாக விளையாடி வெற்றி வாகை சூடிய இந்திய அணி இன்றைய போட்டியில் தனது வெற்றிப்பயணத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச அணி ஆப்கானிஸ்தானுடனான போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கான வாய்ப்பை நோக்கி நகர வேண்டும் எனில் தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை, வங்கதேச அணி வீழ்த்தியிருந்தது. அதே முனைப்புடன் அந்த அணியும் களமிறங்கும் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in