வாணவேடிக்கை காட்டிய ரூஸோவ்: வங்கதேசத்தை வறுத்தெடுத்தது தென் ஆப்பிரிக்கா!

வாணவேடிக்கை காட்டிய ரூஸோவ்: வங்கதேசத்தை வறுத்தெடுத்தது தென் ஆப்பிரிக்கா!

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் அணியை தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டில் இன்று சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்க தேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய பவுமா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்த போதிலும் மறுமுனையில் டீகாக் மற்றும் ரூசோவ் அதிரடி காட்டினர். வங்கதேச அணியின் பந்துகளில் வாணவேடிக்கை காட்டிய இருவரும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரூஸோவ் 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். டீகாக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணியை ஆரம்பம் மிரட்டியது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 16.3 ஓவர்கள் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக லிட்டன் டாஸ் மட்டும் 34 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ஆன்ரிச் நார்ஜே 4 விக்கெட்டுகளையும், தப்ரைஸ் சாம்சி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 106 ரன்களைக் குவித்த தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரூஸோவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in