உலகக் கோப்பை போட்டி... நியூசிலாந்திற்கு 246 ரன் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

வங்கதேசம், நியூசிலாந்து அணி கேப்டன்கள்.
வங்கதேசம், நியூசிலாந்து அணி கேப்டன்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசம் 246 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 11வது லீக் போட்டியில் நியூசிலாந்து - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மாணித்தது.

இதையடுத்து, களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன் எடுத்தது, அதிபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 66 ரன்னும், மஹமதுல்லா 41 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் பெர்குசன் அதிபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற 246 ரன்னை வங்கதேச அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதுவரை நடைபெற்ற 2 போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடியுள்ள நிலையில், இந்த இலக்கு அவர்களுக்கு எளிதான ஒன்றாக இருக்கும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in