கோலியின் சதத்தை தடுக்க திட்டம் போட்ட வங்கதேசம்... அம்பயரின் அதிர்ச்சி முடிவு!

கோலியின் சதத்தை தடுக்க திட்டம் போட்ட வங்கதேசம்... அம்பயரின் அதிர்ச்சி முடிவு!
Updated on
2 min read

இந்தியா - வங்கதேசம் இடையேயான நேற்றைய போட்டியில் விராட் கோலியின் சதத்தை தடுக்க வங்கதேச வீரர் நசூம் அஹ்மத் செய்த செயலும், அதற்கு நடுவரின் எதிர்வினையும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

வங்க தேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதத்தை நெருங்கிய நிலையில், அதற்கு எதிராக வேண்டுமென்றே வங்கதேச வீரர் நசூம் அஹ்மத் ஒய்டு பந்தை வீசினார். அதைக் கண்ட ரசிகர்கள் இது தவறான செயல் என நினைத்த போது, அம்பயர் அதற்கும் மேல் சென்று ஒய்டு தர மறுத்தார். இந்த இரண்டு சம்பவமும் கிரிக்கெட்டுக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தப் போட்டியில், வங்கதேசம் நிர்ணயித்த 257 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 41.3 ஓவர்களில் எட்டியது. கடைசி சில ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில், விராட் கோலி சதம் அடிக்க முடிவு செய்தார். அவர் அப்போது 70 ரன்கள் எடுத்து இருந்தார்.

அடுத்த நான்கு ஓவர்களையும் தானே ஆட முடிவு செய்து, ராகுலுக்கு ஸ்ட்ரைக் தராமல் 40 ஓவரின் முடிவில் சிங்கிள் ரன் ஓடி அடுத்த ஓவரையும் தானே எடுத்துக் கொண்டு ஆடினார். கோலியின் இந்த செயல் சரியா? தவறா? என சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனால், போட்டியில் கோலி இதை செய்த போது வங்கதேச வீரர்கள் இதை தடுக்க நினைத்தனர். 41வது ஓவரின் இரண்டாவது பந்து பவுன்சர் ஆகி, வைடு என அறிவிக்கப்பட்டது. அடுத்து வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், நசூம் அஹ்மத் 42வது ஓவரின் முதல் பந்தை வேண்டுமென்றே வைடாக செல்லுமாறு வீசினார். அப்படி செய்தால் இந்தியா வெற்றிக்கு அருகே செல்லும். கோலி சதம் அடிக்கும் முன்பே இந்திய அணியை வெற்றி பெற வைக்கலாம் என்று வங்கதேசம் திட்டமிட்டது.

அப்போது களத்தில் இருந்த அம்பயர் அதற்கு விதிப்படி ஒய்டு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், அவர் கோலிக்கு சாதகமாக செயல்பட்டு ஒய்டு கொடுக்காமல் நின்றார். அதைக் கண்டு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் பின் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி சிக்ஸ் அடித்து தன் சதம் மற்றும் அணியின் வெற்றி இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து முடித்தார் கோலி.

இந்த சம்பவத்தில் வங்கதேசம் செய்தது நிச்சயம் அவச்செயல் என விமர்சனம் எழுந்துள்ளது. விளையாட்டு என்றால் நேர்மையாக விளையாட வேண்டும். அடுத்த அணி பேட்ஸ்மேன் சாதனையை தடுப்பது விளையாட்டின் நோக்கம் அல்ல. அவரது விக்கெட்டை வீழ்த்தி நீங்கள் அதை செய்யலாம். ஆனால், ஒய்டு வீசி அதை செய்வது மோசமான செயல். ஆனாலும் விதிகளை பின்பற்றி அம்பயர் ஏன் ஒய்டு கொடுக்கவில்லை என்பதையும் அவரோ, ஐசிசி-யோ விளக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in