உலகக் கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வி எதிரொலி! கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் பாபர் அசம்!

பாபர் அசம்
பாபர் அசம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பாபர் அசம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அணியின் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் இன்சமாம் பதவி விலகினார்.

அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மார்கல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம், தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2019 முதல் நான்கு வருடங்கள் அணியில் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல ஏற்ற, இறக்கங்களை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் அணி நிர்வாகம், வீரர்கள், பயிற்சியாளர்களின் முயற்சியால் தாம் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பாபர் அசம், அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வீரராக தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ள பாபர் அசம், புதிய கேப்டனுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தெரிவித்துள்ளார். அதே போல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் பாபர் அசம் நன்றி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in