31 வயதில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் திடீர் ஓய்வு!

ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்
ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மெக் லானிங் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக் லானிங் 2010ம் ஆண்டு தனது 18 வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 103 ஒருநாள் போட்டிகள் மற்றும் 132 டி20 போட்டிகள் உட்பட 241 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

 மெக் லானிங்
மெக் லானிங்

13 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக இது சரியான நேரம் என்று 31 வயதான மெக் லானிங் கூறி தன் ஓய்வை அறிவித்துள்ளார். "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவது என்பது கடினமான முடிவு. ஆனால் இப்போதுதான் எனக்கு சரியான நேரம் என்று உணர்கிறேன். 13 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையை அனுபவித்த வகையில் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி" எனக் கூறி இருக்கிறார் மெக் லானிங்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்
ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்

ஓய்வு பெறுவதற்கான முடிவை எடுத்த பிறகு அவர் தனது அணியினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். லானிங் கடைசியாக பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடி இருந்தார். 2022ம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் கிரிக்கெட்டில் இருந்து 6 மாத இடைவெளி எடுத்துக் கொண்டார். ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விரைவில் அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய துணை கேப்டனான அலிசா ஹீலி, மகளிர் பிக் பாஷ் லீக் லீகின் போது நாய் கடித்த காயத்தால் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், வேறு ஒருவரை கேப்டனாக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in