இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு!

உலகக் கோப்பை இறுதிப் போட்டி
உலகக் கோப்பை இறுதிப் போட்டி

13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி களமிறங்க உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட தோல்வியடையாமல், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளைத் தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளைப் பொறுத்தவரை இந்தியா பலம் வாய்ந்த அணியாக உள்ளது. அதே நேரம் ஆஸ்திரேலியா இந்த தொடர் முழுவதும் தடுமாற்றத்துடன் விளையாடியுள்ளது.

இரு அணிகளுமே அரையிறுதியில் விளையாடிய அதே அணியை மாற்றாமல் இந்த போட்டியிலும் களமிறங்குகின்றன. இதனால், இன்றைய போட்டி மிகவும், மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in