கடைசி பந்துவரை போராடிய நியூசிலாந்து... 5 ரன்களில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணி
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணி

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தரமசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். ஹெட் 109 ரன்னும், வார்னர் 81 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 49.2 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திரா

389 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக அடியது. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா 116 குவித்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, டேரில் மிட்சல் 54 ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 383 ரன் எடுத்தது. இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் என்ற நம்பிக்கை அந்த அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in