ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியும் கைவிடப்பட்டது: தொடர்ந்து சோதிக்கும் மழை

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியும் கைவிடப்பட்டது: தொடர்ந்து சோதிக்கும் மழை

தொடர் மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது.

டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. மெல்போர்ன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருந்தது. காலை முதலே பெய்து வரும் தொடர் மழை காரணமாக முழுமையாக இந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலையில் இந்த மைதானத்தில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டது.

மழை காரணமாக போட்டி கைவிடப்பட்ட காரணத்தால் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.

சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவு அணிகளில் நியூசிலாந்து இரண்டு போட்டிகளில் விளையாடி மூன்று புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மூன்று போட்டிகளில் விளையாடி தலா மூன்று புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in