டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷின் ஆக்ரோஷ ஆட்டம்… பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு!

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் வார்னர்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் வார்னர்
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி 368 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ் இணை அதிரடியாக ஆடியது. பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் சதமடித்து அசத்தினர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 367 எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 163 ரன்னும், மிட்சல் மார்ஷ் 121 ரன்னும் அடித்தனர்.

ஒரு கட்டத்தில் 400 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அந்த வாய்ப்பை ஆஸ்திரேலியா இழந்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும், ஹாரீஷ் ராஃப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 368 என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in