
இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற ஆஸ்திரேலியா 287 ரன்னை இலக்காக நிர்ணயித்தது.
அகமதாபாத்தில் நடைபெறும் 36வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக லபுஷேன் 71 ரன்னும், கேமரூன் கிரீன் 47 ரன்னும், ஸ்மித் 44 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் அதிபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அந்த அணி மிகச்சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளதால், வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு பிரகாசமாக உள்ளது.