ஷாக் கொடுக்குமா இங்கிலாந்து?: ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

கிரிக்கெட் உலகில் எதிர், எதிர் துருவங்களான இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாய வெற்றி என்ற நிலையில் உள்ளன.

இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடைபெற உள்ள 36வது உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அரையிறுதி ரேஸில் முன்னனியில் இருக்கிறது. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4ல் வெற்றியும், 2ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு மேலும் பிரகாசமாகும்.

இங்கிலாந்து அணி 6 போட்டியில் விளையாடி 1 வெற்றி, 5 தோல்வியுடன் பரிதாபகரமான நிலையில் உள்ளது. அந்த அணி, இனி வரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும். அது சில அணிகளுக்கு சாதகமாகவும், சில அணிகளுக்கு பாதகமாகவும் முடியும் நிலை கூட ஏற்படலாம். அதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in