ஹாட்ரிக் வெற்றி தொடருமா?... ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள்

உலகக் கோப்பை தொடரின் 27வது போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 வது இடங்களில் இருக்கும் இந்த அணிகள் மோதிக் கொள்வது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள்

நியூசிலாந்து அணி நல்ல பார்மில் இருந்தாலும், ஆஸ்திரேலியா அந்த அணிக்கு எதிராக உலகக் கோப்பை போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. எனவே தங்களது பலத்தை நிருபிக்கும் விதமாக இரு அணிகளும் முழு திறமையை இன்றைய போட்டியில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

உலகக் கோப்பை தொடரின் 27வது போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. பகல் நேர போட்டியாக ஹிமாச்சல பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் காலை 10 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. உலகக் கோப்பை 2023 தொடரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள்

ஆஸ்திரேலியா அணி முதலில் இரண்டு தோல்விகளை சந்தித்தாலும், அடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து வருகிறது. பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில்,  அந்த அணி கச்சிதமாக இருந்து வருகிறது. 

மோசமாக இருந்த மிடில் ஆர்டர் பேட்டிங்கை, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை சதம் மூலம் நிவர்த்தி செய்தார் க்ளென் மேக்ஸ்வெல். எனவே தற்போது ஆஸ்திரேலியா அணியின் வலிமை, இந்த உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் இருந்ததை விட மோலோங்கியுள்ளது.

ட்ராவிஸ் ஹெட் முழு பிட்னஸ் பெற்றிருக்கும் நிலையில் அவரை இன்றைய போட்டியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் கடந்த போட்டியைக் காயத்தால் மிஸ் செய்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்கலாம்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள்

நியூசிலாந்தை பொறுத்தவரை 5 போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் நான்கு தொடர் வெற்றிகளை பெற்ற முதல் அணியாக இருந்து வந்த நியூசிலாந்தின் வெற்றிப்பயணத்துக்கு, கடந்த போட்டியில் இந்தியா முட்டுக்கட்டை போட்டது. 

நியூசிலாந்து அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்த அதே தரம்சாலா மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. எனவே, ஏற்கெனவே விளையாடிய சூழ்நிலையை சாதகமாக்கி கொள்ள முயற்சிக்கும். கேன் வில்லியம்சான் காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் விளையாடப்போவதில்லை. எனவே டாம் லாதம் கேப்டன்சியை தொடருவார்.

அத்துடன் வெற்றிக் கூட்டணியை தொடர்ந்து வரும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் அதே அணியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் பக்காவாக செயல்படும் அணியாக நியூசிலாந்து இருந்து வருகிறது. அதற்கு ஏற்ப வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர்.

கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தற்போது நியூசிலாந்து அணி இருக்கும் பார்முக்கு ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கு கடும் சவாலை சந்திக்க நேரிடும்.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 8 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. அதேபோல் நியூசிலாந்து வென்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்குச் செல்லும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in