வாழ்வா, சாவா போட்டியில் ஆஸ்திரேலியா தடுமாற்றும்! திணறடிக்கும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா

இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட் இழந்து, தடுமாறி வருகிறது.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 36வது உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மாணித்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், ஹெட் 11 ரன்னுடனும், வார்னர் 15 ரன்னுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து, களத்திற்கு வந்த ஸ்மித்- லபுஷேன் ஜோடி விக்கெட் இழப்பை தவிர்க்க நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன் எடுத்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in