டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுடன் முதலில் மோதுகிறது இந்தியா!

போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
இதுவரை உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள்
இதுவரை உலகக் கோப்பையை வென்ற கேப்டன்கள்twitter

டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது.

2022ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றிபெற்று குரூப் சுற்றுக்குள் நுழைய உள்ளன.

இந்நிலையில், ஐஐசி வெளியிட்டுள்ள 20 டி உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையில் குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர், அக்டோபர் 22-ம் தேதி சனிக்கிழமை டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுப்போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.

அதேநேரத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 23ம் தேதி மெல்பேர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in