நெதர்லாந்துடனான மோதல்; வெற்றிப்பாதையை தொடருமா ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா - நெதர்லாந்து மோதல்
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து மோதல்

இன்றைய உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 24வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ள ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஒருவேளை இந்த போட்டியில் தோற்றால் இனி வரும் போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு என்பது கனவாகிப்போகும். இந்த சூழலில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அணிக்கு திரும்பியுள்ளது மேலும் பலத்தை கொடுத்துள்ளது.

அதேநேரம் தென்னாப்பிரிக்காவை அலறவிட்ட நெதர்லாந்தும் தன்னம்பிக்கையை பெறும் வகையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் திட்டத்துடன் களமிறங்கி விளையாட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in