ரஷீத் கானின் ரன்மழை - சாம்பியனை கதறவிட்ட ஆப்கானிஸ்தான்: போராடி வென்றது ஆஸ்திரேலியா!

ரஷீத் கானின் ரன்மழை - சாம்பியனை கதறவிட்ட ஆப்கானிஸ்தான்: போராடி வென்றது ஆஸ்திரேலியா!

இன்றைய சூப்பர் 12 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா போராடி வென்றது.

டி20 உலகக்கோப்பையில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிரீன் 3 பந்துகளில் ஆட்டமிழந்தார், ஸ்மித்தும் 4 ரன்களின் வெளியேறினார். வார்னர் ஓரளவு நிலைத்து ஆடினார், அவருடன் மார்ஸும் அதிரடியாக ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர். கடைசி நேரத்தில் மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர வழிவகுத்தார். ஆனாலும் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் கடைசி ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறியது. 20 ஒவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் நவீன் உல்ஹக் 3 விக்கெட்டுகளையும், பரூக்கி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்ததாக குல்பதீன் நைப் மற்றும் இம்ராஹிம் ஜட்ரான் இருவரும் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு அச்சத்தை கொடுத்தனர். குல்பதீனை 39 ரன்னில் மேக்ஸ்வெல் ரன் அவுட்டாக்கினார். அதனால் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை பிறந்தது, அதன்பின்னர் அடுத்தடுத்து ஆப்கன் வீரர்கள் ஆட்டமிழந்தனர். கடைசியில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ரசீத் கான் ரன்மழை பொழிந்து ஆப்கானிஸ்தானை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு வந்தார். ஆனாலும் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆப்கன் வீரர் ரஷீத் கான் 23 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலியாவுக்கு கிலியூட்டினார். ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in